இலங்கை ஒற்றையாட்சி அரசின்

இடைக்கால ஜனாதிபதித் தெரிவு- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ராஜபக்சவின் கட்சி வேட்பாளரை ஆதரிக்க முடிவு

எழுத்து மூலமான நிபந்தனைகள் பெறப்பட்டதாகக் கூறியபோதும், பகிரங்கமாக வெளியிடவில்லை
பதிப்பு: 2022 ஜூலை 20 00:12
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 20 00:28
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி வேட்பாளர் டளஸ் அழகப் பெருமாவை ஆதரிக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கொழும்பில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்த முடிவை கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தணி சுமந்திரன் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மொட்டுக் கட்சி வேட்பாளர் டளஸ் அழகபெருமா. பேராசிரியர் ஜீ.எல். பீாிஸ் உள்ளிட்ட பலர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைச் சந்தித்து உரையாடியுள்ளனர். சம்பந்தன், சுமந்திரன், சித்தாத்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் பலரும் சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர்.
 
ஆனால் ஆதரரிப்பது தொடர்பாக எந்தவொரு எழுத்து மூலமான உறுதிமொழி எதனையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெறவில்லை எனக் கொழும்புத் தமிழ் வட்டாரங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

ஆனால் எழுத்துமூல உறுதிமொழி பெறப்பட்டதாக சுமந்திரன் கூறியுள்ளார். இருந்தாலும் அந்த எழுத்து மூல உறுதி மொழியை ஊடகங்களுக்கு வழங்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏற்பட்ட பகை காரணமாகவே டளஸ் அழகபெருமாவை ஆதரிக்க முடிவெடுத்ததாக கூட்டமைப்புத் தகவல்கள் கூறுகின்றன.

மொட்டுக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று சுயாதீனமாகச் செயற்பட்டு வரும் விமல் வீரவன்ச, உதயகம்பன்வில போன்ற சிங்களத் தீவிரவாத உறுப்பினர்கள், மீண்டும் மொட்டுக் கட்சியுடன் இணைந்து அதன் வேட்பாளர் டளஸ் அழகபெருமை ஆதரிக்க முடிவு செய்துள்ள நிலையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தீர்மானித்துள்ளது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எவருக்கும் வாக்களிப்பதில்லை என்று அறிவித்தள்ளது. விக்னேஸ்வரன் இதுவரை தனது முடிவை அறிவிக்கவில்லை.

புதன்கிழமை முற்பகல் பத்து மணிக்கு இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும்.