யூலை ஒன்பதாம் திகதிக்குப் பின்னரான இலங்கைத்தீவின் அரசியல் சூழலில் ஜனாதிபதியாக

ரணில் தெரிவானாலும், போராட்டம் தொடருமென அறிவிப்பு

காலிமுகத்திடல் பண்டாரநாயக்கா சிலைக்கு அருகில் ஒன்றுகூட வேண்டாமென உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிப்பு: 2022 ஜூலை 20 22:45
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 20 23:27
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டாலும், ரணில் விக்கிரமசிங்க பதவி விலகும் வரை போராட்டங்கள் தொடருமென காலிமுகத்திடல் போராட்டக்குழு அறிவித்துள்ளது.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நண்பல் அறிவிக்கப்பட்டது. அடுத்த ஒரு மணிநேரத்தில் வெளியான உயர்நீதிமன்ற அறிவிப்பில், காலிமுகத்திடல் பகுதியில் உள்ள எஸ்.எடபிள்யு.ஆர்.டி .பண்டாரநாயக்காவின் சிலைக்கு அருகில் நின்று போராடும் இளைஞர்கள் சிலையில் இருந்து சுமார் ஐம்பது மீற்றர் தூர இடையில் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளது. குறிப்பாகப் பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பண்டாரநாயக்கா சிலைக்குச் சேதங்கள் விளைவிக்கக்படலாம் என்ற நோக்கில் கோட்டைப் பெலிஸார் தாக்கல் செய்த மனுவைப் பரீலித்தபோது இத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காலிமுகத்திடலில் பிற்பகல் ஒன்றுகூடிய போராட்டக்குழு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகப் போராட்டம் தொடருமெனக் கூறியுள்ளதுடன், புதன்கிழமை இரவுவரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நாளை வியாழக்கிழமை உயர் நீதிமன்ற நீதியரசர் முன்னிலையில் பதவியேற்கவுள்ளார்.

அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் சார்பில் டளஸ் அழகப் பெருமாவை நிறுத்தியதாகவும், ஆனாலும் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்று விட்டாரெனவும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமங்கவுக்குத் தான் வாக்களிக்கவில்லை என்றும் நாடாளுமன்றச் செய்தியாளர்களிடம் மகிந்த ராஜபக்ச கூறினார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட வாக்கு வீதத்திற்கும், வெளியில் நின்று போராடும் மக்களின் கருத்துக்கும் இடையில் பாரிய இடைவெளி இருப்பதாக முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட புதன்கிழமை பிற்பகல் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அறுபத்து ஒன்பது இலட்சம் வாக்குகளையும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தையும் வைத்திருந்த கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து நீக்கம் செய்ய மக்களின் போராட்டம், நாடாளுமன்ற உப்பினர்களுக்குத் தேவைப்பட்டது.

ஆனால் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களின் கருத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதை ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்பு நிரூபணமாக்கியுள்ளதாக புபுது ஜயகொட கூறினார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை முற்பகல், இடம்பெற்ற வாக்கெடுப்பில். ரணில் விக்கிரமசிங்கவுக்கு 134 வாக்குகளும் டளஸ் அழகபெருமாவுக்கு 81 வாக்குகளும் கிடைத்தன.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதாக நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க அறிவித்தார்.