ஜெனீவா அமர்வுக்கு முன்னர்

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர்- விக்னேஸ்வரன்

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச உறுதியளித்ததாகவும் சொல்கிறார்
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 12 22:43
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 13 01:02
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
போர்க்காலத்திலும் அதற்குப் பின்னரான சூழலிலும் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் நாற்பத்து ஆறு பேரை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோரைச் சந்தித்து உரையாடியபோது இவ்வாறு உறுதியளிக்கப்பட்டதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார். சிறைக் கைதிகள் தொடர்பாக முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவின் அறிக்கை கிடைக்கும் வரை காத்திருப்பதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தன்னிடம் கூறியதாகவும் விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
 
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை சம்பந்தமாக வெளியிடப்படவுள்ள அறிக்கை மிகவும் பாரதூரமான ஒன்று.

அந்த அறிக்கை வெளியிடப்படும் முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தன்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றுவார் என்று தான் நம்புவதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தெரிவுக்கான வாக்கெடுப்புக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும், வடக்குக் கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் காணி ஆக்கிரமிப்புகளை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததாக அவர் கூறினார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யவும் ரணில் விக்கிரமசிங்க இணங்கியதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தபோது அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் உடனிருந்தார் என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.