இலங்கை ஒற்றையாட்சி அரசின்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ராஜபக்ச அணி முரண்பாடு

அரச அதிகாரிகள், மாகாண ஆளுநர்கள் நியமன விவகாரத்தில் சர்ச்சை
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 17 21:20
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 18 01:03
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ராஜபக்சக்களை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி உறுப்பினர்கள் முரண்பட்டு வருவதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பலம் இல்லாத நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஆதரவுடன் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரச அதிகாரிகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கான பணிப்பாளர் சபை ஆகியவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும்போது முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
 
குறிப்பாக ஒவ்வொரு மாகாணங்களுக்குமான ஆளுநர்களை நியமிக்கும் விடயத்திலேயே இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஆளுநர்களாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலரை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஆனாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் சிலரின் பெயர்களைப் பரிந்துரை செய்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, ஜோன் அமரதுங்க, நவீன் திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் கடந்த ஆட்சியின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநர்களை மாற்றவேண்டாமென்று பெரமுன வலியுறுத்தியுள்ளது.

இதனையடுத்தே இரு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் எழுந்துள்ளதாகக் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.