இலங்கைத்தீவில் தொடரும் பொருளாதார நெருக்கடி

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்

அதிகாரிகள் மட்ட ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்தாகவில்லை
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 31 09:18
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 04 23:37
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைத்தீவுக்கான அவசரகால கடன் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வியாழக்கிழமை விடுக்கப்படுமென கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுப் பெற்ற கடன்களைச் சுமையாகக் கொண்டுள்ள இலங்கை, நாணய நிதியத்திடமிருந்து மூன்று பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கோரியிருந்தது. அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவசரகாலக் கடன் உதவிகள் கோரப்பட்டுள்ளதால், அது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
 
சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் தொடர்பாக இதுவரையும் அதிகாரபூர்வமான தகவல்கள் வெளிவரவில்லை. இலங்கை அரசாங்கமும் எதுவும் கூறவில்லை. இந்த நிலையிலேயே நாளை வியாழக்கிழமை அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

ஒருவாரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வந்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள், இலங்கையில் தங்கியிருப்பதை மேலும் சில நாட்களினால் நீடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அரச அதிகாரிகளுடன் இடம்பெற்று வரும் கலந்துரையாடல்கள் முடிவடையவில்லை என்றும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதாலும், இலங்கையில் மேலும் சில நாட்கள் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

அதிகாரிகள் மட்ட ஒப்பந்தங்களின் கருத்தானது நாணய நிதியத்தின் முகாமைத்துவம், நிறைவேற்றுப் பணிப்பாளர் சபையின் இணக்கமாகவே கருதப்படுவது வழமை.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னரே நிதியுதவிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.