ஜெனீவா மனித உரிமைச் சபையில்

சர்வதேச விசாரணைப் பொறிமுறை நிராகரிக்கப்படும்- வெளியுறவு அமைச்சர் அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு

இலங்கை அரசியல் யாப்புக்கு உட்பட்டே அனைத்தும் என்கிறார்- இன்று ஜெனீவா பயணம்
பதிப்பு: 2022 செப். 05 21:40
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 06 19:07
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணை செய்வதற்கான சர்வதேசப் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு தொடர்பாக விளக்கமளித்தபோதே அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறினார். இலங்கையின் மீது ஜெனீவா மற்றும் சர்வதேச நாடுகளினால் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் எந்தவொரு தீர்வுகளையும் இலங்கை அரசியல் யாப்புக்கு முரணான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எதிர்க்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
 
குறிப்பாக ஜெனீவா மனித உரிமைச் சபையில் வெளிப்படையாக எதிர்க்கவுள்ளதாகக் கூறிய அமைச்சர் அலி சப்ரி, இலங்கை தொடர்பான தீர்மானங்களை ஏற்கனவே நிராகரித்துள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சர் அலி சப்ரி, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் உள்ளிட்ட உயர்மட்டக்குழு ஒன்று ஜெனீவாவுக்கு இன்று திங்கட்கிழமை பயணமாகியுள்ளது.

அரசியல் யாப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் எனவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

19 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான கட்டமைப்புகள் அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தில் உள்வாங்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

19 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்புவதாகவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.