தொடரும் பொருளாதார நெருக்கடி

மோடி- ரணில் ஜப்பானில் சந்திப்பு - இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து உரையாடல்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஐம்பத்து ஐந்தாவது ஆளுநர்கள் மாநாட்டில் பங்குபற்ற பிலிப்பைன்ஸ் பயணம்
பதிப்பு: 2022 செப். 28 22:11
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 30 20:46
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஜப்பான் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் பங்குபற்றி, ஜப்பான் சென்ற ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார். புதன்கிழமை இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சம்பிரதாயபூர்வமாகச் சந்திப்பு இடம்பெற்றாலும். இலங்கைக்குக் கடன் வழங்குவதில் இந்தியாவின் மறுசீரமைப்புத் தொடர்பாக இருவரும் பேசப்பட்டதாகக் கொழும்பில் உள்ள இலங்கை வெளியுறவு அமைச்சு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணத்தை மேற்கொண்டு திங்கட்கிழமை ஜப்பான் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் முன்னாள் பிரதமர் மறைந்த ஷின்சோ அபேயின் இறுதி மரியாதை நிகழ்வில் கலந்துகொண்டார்.
 
ஜப்பானியப் பயணத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானிய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், சிங்கப்பூர் மற்றும் இந்திய பிரதமர் ஆகியோருடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

அதேவேளை, ஜப்பானில் இருந்து ரணில் விக்கிரமசிங்க பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஐம்பத்து ஐந்தாவது ஆளுநர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்கவே ரணில் விக்கிரமசிங்க பிலிப்பைன்ஸ் நோக்கிப் பயணமானார்.

ஆசிய அபிவிருத்தி வங்கித் தலைவர் ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் பேச்சுவார்த்தை நடத்துவாரென கொழும்பில் உள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு கூறியுள்ளது.