தொடரும் பொருளாதார நெருக்கடி

இலங்கையில் ஒக்ரோபர் மாதம் மீண்டும் மக்கள் புரட்சி என்கிறார் ஹிருணிகா

மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தைத் தடுக்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதாகவும் கூறுகிறார்
பதிப்பு: 2022 செப். 30 20:57
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 01 23:11
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ஓக்ரோபர் மாதம் இலங்கையில் மீண்டும் பாரியதொரு மக்கள் புரட்சி வெடிக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவு தலைவியுமான ஹிருணிகா பிரேமச்சந்திர எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். மக்கள் ஒன்றுகூடலை தவிர்ப்பதற்காக வர்த்தமானி அறிவித்தல்கள் பலவற்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளதாகவும் ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றம் சுமத்தியுள்ளார்.
 
ஒக்ரோபர் மாத நடுப்பகுதியில் ஏற்படவுள்ள மக்கள் எழுச்சியை எந்தவொரு வர்த்தமானி அறிவித்தலாலும் கட்டுப்படுத்த முடியாதெனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர செய்தியாளர்களிடம் கூறினார்.

அரசியல் யாப்பு மாற்றத்தை முன்வைத்துக் கடந்த ஏப்ரல் முதல் யூலை மாதம் வரை மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து நடத்திய போராட்டம் போன்று மற்றுமொரு போராட்டத்திற்கு மக்கள் தயாராகியுள்ளதாகவும் கூறினார்.

இலங்கையில் வாழும் ஏழை மக்கள் எதிர்வரும் நாட்களில் எதிர்நோக்கப் போகும் வறுமை மற்றும் பட்டினி நிலைமை காரணமாக போராட்டம் கிளர்ந்து எழும்பும் என்றும் தீர்வை பெற்றுக் கொள்ளாது மக்கள் அமைதியடையப் போவதில்லை எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர சவால் விடுத்தார்.