வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில்

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை

அரசியல் கட்சிகள் கண்டனம்
பதிப்பு: 2022 நவ. 07 18:23
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 09 02:31
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
மாகாண சபைத தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டுமென பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகளின் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழு ஒன்றை அமைத்துள்ளமை காலம் கடத்தும் செயல் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல்களையோ அல்லது உள்ளூராட்சித் தேர்தல்களையோ தற்போதைக்கு நடத்தும் நோக்கம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லையென ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஹர்சா டி சில்வா கூறியுள்ளார்.
 
கொழும்பில் உள்ள தனியார் இலத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு இரவு வழங்கிய நேர்காணலில், தேர்தல்களைப் பிற்போட்டு ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்துவதே ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கம் என்று அவர் கூறினார்.

2017 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மாகாண சபைத் தேர்தல்களை அன்று தடுத்து நிறுத்தியவர்தான் ரணில் விக்கிரமசிங்க என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தினார்.

கொழும்பின் புறநகர் பகுதியான பத்தரமுள்ளயில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அனுரகுமார திஸாநாயக்க, தேர்தல்களை விரைவாக நடத்துமாறு போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் கூறினார்.

வடக்குக் கிழக்கு எல்லைகளை குடியேற்றம் செய்யப்பட்ட சிங்களக் கிராமங்களுடன் இணைப்பதற்கு வசதியாகவே எல்லை மீள்நிர்ணயக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஈபிஆர்எல்எப் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.