ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின்

வரவுசெலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவும் இல்லை எதிர்ப்புமில்லை- முன்னணி எதிராக வாக்களிப்பு
பதிப்பு: 2022 நவ. 22 21:03
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 22 23:55
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு முப்பத்து ஏழு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்திருந்தார். இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவாகவோ, எதிராகவோ வாக்களிக்காமல் புறக்கணித்தது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எதிராக வாக்களித்தது. தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
 
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக நூற்று இருபத்து ஒரு வாக்குகளும் எதிராக எண்பத்து நான்கு வாக்குகளும் பெறப்பட்டன.

சென்ற செவ்வாய்க்கிழமை முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. நாளை புதன்கிழமை அமைச்சுக்களுக்கான குழு நிலை விவாதம் இடம்பெறவுள்ளது.

சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் எதிராக வாக்களித்தன.