இலங்கைத்தீவில்

மற்றுமொரு ஆட்சி மாற்றத்துக்காகப் போராட்டம் நடத்தினால் முப்படைகளையும் பயன்படுத்தி அடக்குவேன்- ரணில்

அவசரகாலச் சட்டத்தையும் அமுல்படுத்துவேன் எனவும் எச்சரிக்கை
பதிப்பு: 2022 நவ. 23 22:08
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 23 22:38
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
அடுத்த ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு முயற்சி எடுத்தால், முப்படைகளைப் பயன்படுத்தி அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்து அடக்குவேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அச்சுறுத்தும் தொனியில் கூறினார். நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். வரவு செலவுத் திட்டம் முடிவடைந்த பின்னர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
 
வரவுசெலவுத் திட்டத்தில் அமைச்சுக்களுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார். இந்த அரசாங்கத்தைக் கலைக்க மற்றுமொரு தொடர் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது.

அவ்வாறான எந்தவொரு போராட்டத்திற்கும் ஜனாதிபதி என்ற முறையில் இடமளிக்கமாட்டேன் என்று ரணில் விக்கிரமசிங்க கூறினார். முப்படைகளையும் பயன்படுத்தி போராட்டங்கள் அடக்கப்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்தார்.

பொருளாதார நெருக்கடி தீரும் வரை இந்த நாடாளுமன்றத்தைக் கலைக்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.