பொருளாதார நெருக்கடிக்குப் பின்னரான அரசியல்

ராஜபக்ச நினைவேந்தல் நிகழ்வுக்கு ரணில் பிரதம அதிதி - ஆனால் கோட்டாபய பங்குபற்றவில்லை

மகிந்த, பசில், நாமல் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்
பதிப்பு: 2022 நவ. 24 22:44
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 26 18:20
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் தந்தையாரான ஏ,டி.ராஜபக்சவின் ஐம்பத்து ஐந்தாவது நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் ராஜபக்சவின் குடும்ப உறுப்பினர்கள் பங்குபற்றியபோதும் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை. வியாழக்கிழமை கொழும்பு நகர மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச பங்குபற்றுவார் என்று ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஊடகம் புதன்கிழமை தெரிவித்திருந்தது.
 
ஆனால் இன்று இடம்பெற்ற நிகழ்வில் அவர் கலந்துகொள்ளவில்லை. மகிந்த ராஜபக்ச சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பங்குபற்றினர். மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கவுக்கு அருகில் இருந்தார்.

நிகழ்வில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார். பிரதமர் தினேஸ் குணவர்த்தன உள்ளிட்ட சில மூத்த அமைச்சர்களும் பங்குபற்றினர்.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஏ,டி.ராஜபக்சவின் நினைவேந்தல் நிகழ்வில் ரணில் விக்கிரமசிங்க குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி பங்குபற்றியமை இதுவே முதற்தடவையாகும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றும், ஆனாலும் அவர் பங்குபற்றவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட சில பிரமுகர்களுக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி தெரிவித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டதால், நடைபெறவுள்ள தேர்தலில் பொதுச் சின்னம் ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுமென கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் கருதுவதாகக் கூறப்படுகின்றது.