உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்

சந்தேகநபர் கொலை செய்யப்பட்டமை அராஜகம்- சஜித்

சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு மிரட்டல், அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2022 நவ. 29 22:43
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 02 00:36
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சந்தேக நபர் ஒருவர் கொழும்பில் பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை சட்டத்தை மதிக்காத செயல் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், இலங்கையில் அராஜக செயற்பாடு தலைதூக்கியுள்ளது என்றும் விமர்சித்தார். நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றால். பொலிஸாரின் செயற்பாடுகளிலும் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
 
சிரந்த அமரசிங்க என்ற சமூக ஊடகச் செயற்பாட்டாளருக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அத்துடன் வேறு சமூகச் செயற்பாட்டாளர்கள் சிலரும் அச்சுறுத்தப்படுன்றனர்.

ஆகவே கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பேணப்பட வேண்டும். இதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.