ரணில் விக்கிரமசிங்க

அரசாங்கத்துக்கு எதிரணி உறுப்பினர்கள் சிலர் ஆதரவு

அமைச்சர்களாகவும் பதவியேற்கவுள்ளனர்
பதிப்பு: 2022 டிச. 05 21:27
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 05 22:03
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
வரவு செலவுத் திட்டம் முடிவடைந்த பின்னர் புதிய அமைச்சர்கள் சிலர் பதவிப் பிரமாணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த வாரம் சிலர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. முன்னாள் அமைச்சர்களான குமார வெல்கம, ராஜித சேனாரத்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகத் தெரிய வருகின்றது. ராஜித சேனரட்ன சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்.
 
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சஜித் பிரேமதாச தலைமையில் ஐம்பத்து நான்கு பேர் பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சக்தியாகச் செயற்பட்டபோது அதன் பிரதான உறுப்பினராக ராஜித சேனரட்ன செயற்பட்டிருந்தார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரும்கூட காரசாரமாக விமர்சனம் செய்திருந்த ராஜித சேனரட் தற்போது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணையவுள்ளார்.

குமார் வெல்கம போக்குவரத்து அமைச்சராகவும் ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராகவும் மற்றும் துமிந்த திஸாநாயக்க மின்சக்தி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

ஐக்கிய மக்கள் சக்தி அணியில் இருந்து மேலும் பலர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ராஜித சேனரட்ன மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திலும் அமைச்சராகப் பதவி வகித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.