பொருளாதார நெருக்கடி

வெளிநாட்டுத் தூதுவர்களுடன் ரணில் உரையாடல்

அரசியல், பொருளாதார நிலைமைகள் குறித்துப் பேசப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல்
பதிப்பு: 2022 டிச. 06 20:05
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 09 15:42
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைக்கு நிதி வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கும் நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலரை அழைத்துக் கலந்துரையாடியுள்ளார். பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில் ரணில் விக்கிரமசிங்க தூதுவர்களையும் தூதரக அதிகாரிகள் சிலரையும் சந்தித்து உரையாடியுள்ளார்.
 
பிரித்தானிய உயர்ஸ்தானிகர், அமெரிக்க தூதுவர், ஜப்பானிய தூதுவர், இந்தியா உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோருடனேயே சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் சமகால அரசியல் நெருக்கடிகள், எதிர்கால பொருளாதார அபிவிருத்தி மற்றும் இலங்கைக்குக் கடன் வழங்குவது தொடர்பான செயற்திட்டங்கள் பற்றி ரணில் விக்கிரமசிங்க விளக்கம் அளித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

குறிப்பிட்ட தூதுவர்களுடன் ரணில் விக்கிரமசிங்க பேசிய விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் விரிவாக எதுவும் கூறப்படவில்லை.

கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் இச் சந்திப்புக்கு அழைக்கப்படவில்லை.

இலங்கைக்கு வழங்கிய கடன்களில் சுமார் இருபத்து இரண்டு பில்லியன்களை இலங்கை மீளச் செலுத்த வேண்டுமென சீனா கோரியுள்ள நிலையில், கடன் மறுசீரமைப்புத் தொடர்பாகச் சாதகமான முடிவுகள் இதுவரை எட்டப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியம் தொடர்ச்சியாக சீனா இந்திய ஆகிய கடன் வழங்கும் நாடுகளுடன் பேசி வருகின்றது. இந்த நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டுத் தூதுவர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார்.