கொழும்பு போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த

ஜப்பான் அரசுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ரத்துச் செய்த ஆட்சியாளர்கள்

இலங்கைக் கணக்காய்வாளர் திணைக்களத்தின் அறிக்கையில் உண்மைகள் வெளிவந்தன
பதிப்பு: 2022 டிச. 07 18:52
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 09 12:48
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கையின் தலைநகர் கொழும்பில் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜப்பான் அரசின் கடனுதவித் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இலகு ரயில் சேவைத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக ரத்துச் செய்துள்ளது. இத் திட்டத்தை ரத்துச் செய்வது தொடர்பாக ஜப்பான் அரசுடன் எந்தவிதமான பேச்சுக்களும் நடத்தப்படவில்லை என்றும், இதனால் ஐநூற்றுப் பதினாறு கோடி ரூபாவை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் ஜப்பான் கோரியுள்ளது. சர்வதேச விதிகளின் பிரகாரம் மனுத்தாக்கல் செய்யப்பட்டால் இதனைவிடக் கூடுதல் நஷ்டஈடு வழங்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இத் திட்டத்தை இரத்துச் செய்தமை தொடர்பாக விசேட கணக்காய்வின் போது தெரிய வந்துள்ளதாக இலங்கைக் கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

60,080,000 ஜப்பானிய யென் (ரூ. 10.4 கோடி) முன்கூட்டிய கட்டணமாக திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டுத் திட்டம் முழுமையாக நிறைவு பெற்ற பின்னர் குறித்த தொகையில் ஐம்பது சதவீதம் மீண்டும் கையளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கைக் கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தின் கருத்தின்படி, செப்டம்பர் 24, 2020 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் இத் திட்டம் குறித்துப் பேசப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இத் திட்டம் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட இலங்கைக் கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தின் அறிக்கையில் ரத்துச் செய்யப்பட்டமை குறித்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கொழும்புத் துறைமுகக் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டு செய்யப்பட்டது. இந்தியா. ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் இலங்கையின் ஒத்துழைப்புடன் குறித்த அபிவிருத்தித் திட்டத்தைச் செய்வதென ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன ஒப்பந்தத்தைச் செயற்படுத்த அனுமதிக்கவில்லை. 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபாய ராஜபக்ச குறித்த ஒப்பந்தத்தைச் ரத்துச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.