இலங்கைத்தீவில்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்தத் திட்டம்

தேர்தகள் ஆணைக்குழு அதிகாரி
பதிப்பு: 2022 டிச. 19 22:36
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 23 00:10
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்த திட்டமிடப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் சிறப்புப் பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் பிரேரணை நிறைவேற்றப்பட முன்னர் மாகாணங்களுக்கான எல்லை மீள் நிர்ணய சபை தமது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டுமென ஆணைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
தேர்தல் முறைமைகளை மாற்றியமைப்பது தொடர்பாகக் கொழும்பில் இன்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

2017 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மாகாண சபைத் தேர்தல்கள் இதுவரை நடத்தப்படவில்லை. கொரோனா நோய்த் தொற்று மற்றும் பொருளார நெருக்கடிககள் காரணமாக தேர்தல்கள் பிற்போடப்பட்டு வருகின்றன.

அத்துடன் மாகாணங்களுக்கான எல்லை மீள் நிர்ணயக் குழு அறிக்கையை சமர்ப்பிக்கவும் வேண்டும். இதனால் அடுத்த வருடம் மார்ச் மாதம் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை நடத்த ஆலோசிப்பதாக அவர் கூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் உத்தரவு வழங்கும்வரை எந்த ஒரு தேர்தலையும் நடத்துவதற்கான ஏற்பாடு செய்ய முடியாதெனவும் நிமல் கேமசிறி கூறினார்.