இலங்கைத்தீவில்

ஜனவரி மாதம் முதல் பத்து மணிநேர மின்சார வெட்டு

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத் தலைவர் நிஹால் வீரரத்ன
பதிப்பு: 2022 டிச. 21 23:57
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 23 00:09
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
பொருளாதார நெருக்கடி நீடித்து வரும் நிலையில், இலங்கையில் மின்சாரத் தடையும் ஏற்படவுள்ளது. டிசெம்பர் மாதம் முப்பத்து ஒராம் திகதிக்குப் பின்னர், இலங்கைத்தீவு முழுவதிலும் பத்து மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளர். இதனால் இலங்கைதீவு முழுவதும் செயலிழக்க நேரிடும் என்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத் தலைவர் நிஹால் வீரரத்ன திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
 
முப்பத்து ஓராம் திகதியுடன் நிலக்கரி கையிருப்பு தீர்ந்துவிடும் என்றும் அதன்பின்னர், நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி அலகுகள் மூடப்படும் என்றும் கூறிய அவர் இதனாலேயே பத்து மணி நேர மின்வெட்டு நடைமுறைக்கு வரும் என்றும் கூறினார்.

இது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகரவிடம் ஊடகவியலாளர்கள் தொடர்பு கொண்டபோதும் அவர் பதிலளிக்கவில்லை.

இதேவேளை மக்கள் அனைவரும் தியாகங்களைச் செய்யத் தயராக இருக்க வேண்டுமென அமைச்சர் கெகலிய ரம்பக்வெல இரத்திரனியல் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார்.