இலங்கைத்தீவில் முழுவதும்

கட்டணம் உயர்த்தப்படவில்லையானால் மின் தடை மேலும் அதிகரிக்கப்படும்- அமைச்சர் காஞ்சன

அதிகரிக்க அனுமதிக்க முடியாதென்கிறது ஜே.வி.பி
பதிப்பு: 2022 டிச. 27 23:16
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 29 18:08
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைத்தீவு முழுவதிலும் குறைந்தது எட்டு மணிநேர மின் தடை ஏற்படுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தால் குறைந்தளவு மணி நேரம் மாத்திரமே மின் தடை ஏற்படும் எனவும் அமைச்சர் கூறினார். நாளாந்த மின்வெட்டைக் குறைக்கும் வகையில், மின்சார சபையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டும். இல்லையேல் மின்வெட்டு நேரத்தை மேலும் ஆறு மணி நேரமாக அதிகரிக்க வேண்டும். தற்போது இரண்டு மணி நேர மின்வெட்டு மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மின்சாரசபை நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
 
மின்சாரத்தை உற்பத்தியின் அளவை மேலும் உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கொழும்பில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்தபோது கூறினார்.

இதேவேளை மின் கட்டண உயர்வுக்கு அதிகரிக்க முடியாதென ஜே.வி.பி தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஐம்பது சதவீத உயர்வை மின்சாரபை மேற்கொண்ட நிலையில் மேலும் மின் கட்டணத்தை அதிகரித்தால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுவர் என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.