பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர் விவகாரங்கள்

கடன் வழங்கும் நாடுகளிடம் இருந்து எழுத்துமூல உறுதிமொழிகள் இல்லை

சர்வதேச நாணய நிதியத்துடன் மார்ச்சில் ஒப்பந்தம் செய்ய முடியுமென எதிர்ப்பார்ப்பதாகக் கூறுகிறார் அமைச்சர்
பதிப்பு: 2022 டிச. 29 21:43
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 31 09:37
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மேலும் தாமதமடைவதற்குச் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு இழுபறி மாத்திரம் காரணம் அல்லவென அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. இலங்கைக்கு நிதியுதவி வழங்கத் தயாராக இருப்பதாகக் கடன் வழங்கும் சில நாடுகள் கூறுகின்றன. ஆனாலும் இதுவரையும் கடன் வழங்குநர்கள் முறைப்படியோ அல்லது எழுத்துபூர்வமாகவோ உறுதியளிக்கவில்லை என்றும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கடன் பெறுவதற்கான உடன்படிக்கையைச் செய்ய முடியும் என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று வியாழக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் கடன் பெறுவதற்கான அனுமதி கிடைத்தவுடன் இலங்கைப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஆனாலும் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள இரண்டு தசம் ஒன்பது பில்லியன் அமெரிக்க டொலர் நிதி போதுமானதல்ல என்றும் மேலும் நிதியைப் பெறுவதற்குரிய பேச்சுக்களை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் ஹௌன் சேமசிங்க கூறியுள்ளார்.