பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர் விவகாரங்கள்

அமெரிக்க இருநூற்று நாற்பது மில்லியன் டொலர்களை 2022 இல் வழங்கியது- தூதுவர் விளக்கம்

மீண்டும் நெருக்கடி ஏற்படும் என்கிறார் உதய கம்பன்வில
பதிப்பு: 2023 ஜன. 01 22:29
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 03 02:38
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
இலங்கைத்தீவு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியினால் கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்கா வழங்கிய நிதியுதவிகள் தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் விளக்கமளித்துள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் இலங்கைக்கு இருநூற்று நாற்பது மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதியுதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக ருவிற்றர் தளத்தில் அறிவித்துள்ளார். இது தொடர்பாக விளக்கமளித்துள்ள கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், அடிப்படை உணவுப் பாதுகாப்பு, மாணவர்களுக்கான மதிய உணவு, விவசாயிகளுக்கு உரம் போன்றவற்றுக்கே உதவியளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
 
அமெரிக்க நிதியுதவிகள் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பண உதவி வழங்கப்பட்டது என்றும் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாக இருந்ததாகவும் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் தனியார், சிவில் சமூகம் மற்றும் இலங்கைத்தீவு மக்களுடன் இணைந்து பணியாற்றிய அமெரிக்கா அரசாங்கத்தின் பங்களிப்பை எடுத்துக் காட்டுவதாகவும் ஜூலி சுங் ருவீற்றர் பதவில் மேலும் கூறியுள்ளர்.

அதேவேளை. சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி இந்த மாதம் கிடைக்கக்கூடிய வாய்புகள் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மக்களுக்குப் பொய் கூறுவதாகவும், மார்ச் மாதம் கூட சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டு தசம் ஒன்பது பில்லியன் நிதி கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் இல்லை என்றும், இலங்கைக்குக் கடன் வழங்கும் நாடுகள் குறிப்பாகச் சீனா, கடன் மறுசீரமைப்புக்கு முழுமையாக உடன்படவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் முதல் மக்கள் அனைத்துப் பொருட்களையும் பெற்றுக்கொள்ள மீண்டும் வரிசையில் நிற்க நேரிடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்வில தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கும் என்றும் அவா் எச்சரிக்கை விடுத்துள்ளார்.