இலங்கைத்தீவில்

மின் பாவனையாளர்கள் கையெழுத்துப் போராட்டம்

விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார் ரணில்
பதிப்பு: 2023 ஜன. 03 08:39
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 05 02:52
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
இலங்கைத்தீவில் மின்சார கட்டணம் அதிகரிப்புத் தொடர்பாகப் பல்வேறு எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளதால், மின் பாவனையாளர்கள் சங்கம் அறுபத்து ஒன்பது இலட்சம் பாவனையாளர்களின் கையெழுத்தை சேகரிக்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், புதிய வர்த்த மானி அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். இலங்கையில் மின்சார சபை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் வைத்தியசாலை ஆகிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்தே விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
 
அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் இரண்டாம் பிரிவிற்கு ஏற்ப ரணில் விக்கிரமசிங்கவினால் கையொப்பமிடப்பட்டு இந்த வர்த்தமானி செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

மின்சாரம் வழங்கல், பெட்ரோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் விநியோகம், வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு, சிகிச்சையளித்தல் போன்றவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.