இனப்பிரச்சினைத் தீர்வு என்ற பெயரில்

ரணில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பார்- விக்கி அணி பதில் இல்லை

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கும் வேட்புமனுக்கள் கோரப்படுகின்றன
பதிப்பு: 2023 ஜன. 04 10:19
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 05 02:51
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வியாழக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்திப்பில் பங்குபற்றவுள்ளனர். வடக்கு மாகாண உறுப்பினர்களைச் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்த ரணில் விக்கிரமசிங்க சென்ற மாதம் சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டியிருந்தார். இந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனியாகச் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
 
இச் சந்திப்பையடுத்து இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இந்த மாதம் பத்தாம் பதினொராம் மற்றும் பதின்மூன்றாம் திகதிகளில் தொடர் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இந்தப் பேச்சில் பங்குபற்றும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சந்திப்பில் கலந்துகொள்ளுமா இல்லையா என்று விக்னேஸ்வன் இதுவரை எதுவுமே கூறவில்லை.

அழைப்பு அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இப் பேச்சுவார்த்தையின்போது அமைச்சர்களான, விஜேதாஸ ராஜபக்ச, அலி சப்ரி மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பங்குகொள்வர் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏலவே புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் மாதம் நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனவரி 18 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆனாலும் தேர்தலுக்கான திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.