புவிசார் - அரசியல், புவிசார் - பொருளாதாரம்

இலங்கையுடன் இந்தியா திருகோணமலை அபிவிருத்தி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ஏற்பாடு

அமைச்சர் ஜெய்சங்கர் வியாழக்கிழமை கொழும்பு வருகிறார்-
பதிப்பு: 2023 ஜன. 16 10:13
புதுப்பிப்பு: ஜன. 21 13:35
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளார். இரண்டு நாள் பயணத்தில் இலங்கையுடன் இரண்டு புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுமெனக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அமைச்சர் ஜெய்சங்கரின் வருகை உறுதிப்படுதியுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்தப் பணயம் இரு நாடுகளிடையேயான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் எனக் கூறியுள்ளது.
 
கொழும்பில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் நிலையில் திருகோணமலை அபிவிருத்தி திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவுடன் மின்சார இணைப்புத் திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த இரண்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகமும் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரையும் சந்தித்து உரையாடவுள்ளார்.

அதேவேளை, தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைவர்களை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தத்து உரையாடுவாரா இல்லையா என்பது குறித்து இதுவரை எதுவும் கூறப்படவில்லை.

இதேவேளை, திருகோணமலை அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பற்றிய விபரங்கள் முழுமையாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. மின்சார இணைப்புத் தொடர்பான ஒப்பந்தம் குறித்து இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.