வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

இருபத்து ஒராம் திகதி நண்பகல் நிறைவு
பதிப்பு: 2023 ஜன. 18 09:16
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 21 13:00
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
வடக்குக் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட இலங்கைத்தீவில் உள்ள முந்நூற்று நாற்பது உள்ளூராட்சி சபைகளின் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெறும். சென்ற நான்காம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அறிவிப்பை இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் எல்லிபிட்டிய பிரதேச சபை தவிர்ந்த ஏனைய முந்நூற்று நாற்பது உள்ளூராட்சி சபைகளுக்கும் வேட்பு மனுத் தாக்கல் இடம்பெறுகின்றன.
 
உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்புமனுக்கள் தொடர்பான அறிவித்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

18 மாவட்டங்களைச் சேர்ந்த 153 உள்ளூராட்சி சபைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் மாவட்டத் தேர்தல் செயலகங்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் பிற்போடப்படமாட்டாது என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தேர்தல் நடைபெறும் என்றும் ,தன் மூலம் அரசாங்கம் எதிர்கட்சிகளின் பலத்தை அறிய முடியும் எனவும் அமைச்சர் கூறினார்.

தேர்தலை எதிர்கொள்ள அரசாங்கம் பயப்படவில்லை என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.