இலங்கைத்தீவில்

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம்- தேரர்கள் ரணிலுக்குக் கடிதம்

நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்ட சட்டம் என்றும் கூறுகின்றனர்
பதிப்பு: 2023 ஜன. 31 22:39
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 01 00:25
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
பதின் மூன்றாவது திருத்தச் சட்டம் இந்தியாவினால் திணிக்கப்பட்டது. ஆகவே சர்வஜன வாக்கெடுப்பின்றி அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று கோரி எல்லே குணவன்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் ஜனாதிபதி, ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். பதின் மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று தேரர்கள் கடிதத்தில் கோரியுள்ளனர்.
 
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மூலோபாயத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையின் நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாகவே பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொலிஸ் காணி அதிகாரங்கள் உள்ளிட்ட சில அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுமாயின் அது இலங்கைத்தீவின் தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்றும் தேரர்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவின் வளங்கள் மற்றும் சொத்துக்கள் எதனையும் வெளிநாட்டவர்க்கு விற்பனை செய்வதை உடனடியாக தடுக்கவும். கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் இலங்கைத்தீவு இழந்த செல்வம் மற்றும் வளங்களை மீட்டெடுக்க வேண்டும் எனவும் தேரர்கள் தமது கடிதத்தின் வலியுறுத்தியுள்ளனர்.