இலங்கைத்தீவில்

பதின்மூன்றை நடைமுறைப்படுத்த வேண்டாமென ராஜபக்ச தரப்பு அமைச்சர்கள் ஜனாதிபதிடம் வேண்டுகோள்

காணி - பொலிஸ் அதிகாரங்ளைத் தவிர்ப்பதாக ரணில் உறுதி
பதிப்பு: 2023 பெப். 09 23:09
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 11 23:00
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
புதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் வெறுமனே மாகாண சபைத் தேர்தல்களை மாத்திரம் நடத்த வேண்டுமென ராஜபக்ச சார்பு அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. கொழும்பில் பௌத்த பிக்குமார் நடத்திய போராட்டம் மற்றும் பதின்மூன்றை நடைமுறைப்படுத்த வேண்டாமென மகாநாயக்கத் தேரர்கள் அனுப்பிய கடிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவுடன் உரையாடிய ராஜபக்ச தரப்பு அமைப்புகள், பதின்மூன்று பற்றிய பேச்சைக் கைவிடுமாறும் கேட்டதாக அறிய முடிகின்றது.
 
குறிப்பாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன இக் கோரிக்கையை முன்வைத்ததாகவும் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து வேண்டுகோள் விடுப்பதற்கு முன்னர் தினேஸ் குணவர்த்தனவுடன் ராஜபக்ச தரப்பு அமைச்சர்கள் பேச்சு நடத்தியதாகவும் அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை காணி பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்த்து ஏனைய சில அதிகாரங்களை மாத்திரமே வழங்குவது பற்றி ஆலோசிப்பதாக ரணில் விக்கிரமசிங்க கூறியதாகவும் அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. இந்த விடயத்தில் ஜே.வி.பி அமைதியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.