காலி மேல் நீதிமன்றத்தினால்

தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் பிணையில் விடுதலை

பன்னிரெண்டு ஆண்டுகள் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகச் சட்டத்தரணி கூறினார்
பதிப்பு: 2023 பெப். 14 16:16
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 19 07:07
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் நால்வருக்கு பதின் நான்கு வருடங்களின் பின்னர் திங்கட்கிழமை பிணை வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்து, 22 பேர் காயமடைந்தமை தொடர்பாக இந்த நான்கு கைதிகளுக்கும் எதிராக இலங்கைக் குற்றப் புலனாய்வுத்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது சம்பவம் தொடர்பாகப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இருபத்து மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு காலி மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 
வழக்கின் முதலாவது பிரதிவாதியான கந்தையா இளங்கோ, 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், முதலாவது பிரதிவாதியால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம், 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் திகதி இடம்பெற்ற விசாரணையின் போது நீதமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதை பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி இன்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டு பதின் நான்கு வருடங்கள் விசாரணை எதுவும் நடைபெறாத நிலையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தமையினால் குறித்த கைதியும் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஏனைய மூன்று கைதிகளும் திங்கட்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.