இலங்கைத்தீவில் தொடரும் பொருளாதார நெருக்கடி

உள்ளூராட்சி சபைத் தேர்தல் செலவுக்குரிய நிதியை வழங்க முடியாதென நிதியமைச்சு அறிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தகவல்
பதிப்பு: 2023 பெப். 17 20:47
புதுப்பிப்பு: பெப். 19 07:08
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைத்தீவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் உள்ளூராட்சி சபைத் தேர்தல் செலவுகளுக்குரிய நிதியை வழங்க முடியாதென நிதி அமைச்சின் செயலாளர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை நிதியமைச்சில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், நிதியமைச்சின் செயலாளர் நிதியை வழங்க முடியாதெனக் கூறியதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாகவும். இதனால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குக் குறைந்தது மூன்று பில்லியன் ரூபாய்களைக்கூட வழங்க முடியாத சிக்கல் இருப்பதாகவும் நிதியமைச்சின் செயலாளர் விளக்கமளித்ததாகச் சட்டத்தரணி நிமல் புஞ்சி ஹேவா கூறினார்.

அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, இலங்கையில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்க முடியும் என நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்

அத்தியாவசியமற்ற அனைத்து செலவுகளுக்கும் நிதி அமைச்சரின் ஒப்புதல் அவசியம் என மற்றொரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் சந்திப்பில் பங்குபற்றிய நிதியமைச்சின் அதிகாரிகள் எடுத்துக்கூறியதாகவும் நிமல் புஞ்சிஹேவா மேலும் கூறினார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த பத்து மில்லியன் செலவாகுமென தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.