இலங்கைத்தீவில் தொடரும் பொருளாதார நெருக்கடி

மின் கட்டணம், வரி உயர்வுக்கு எதிராக வேலை நிறுத்தப் போராட்டம்

அரச மற்றும் தனியார் துறைத் தொழிற் சங்கங்கள் ஏற்பாடு
பதிப்பு: 2023 பெப். 28 09:17
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 02 21:22
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
மின்சாரக் கட்டணம் அறுபத்து ஆறு வீதத்தினால் உயர்வடைந்துள்ளமை, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றமைக்கு மற்றும் வரி அதிகரிப்புக்கு எதிராக நாளை புதன்கிழமை கொழும்பில் அனைத்துத் தொழிற் சங்கங்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. அரச மற்றும் தனியார் வங்கிகள் தனியார் அரச மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் நாளை மூடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் போராட்டம் தொடர்பாகத் தொழிற்சங்க அமைப்புகள் ஊடகங்களில் பகிரங்க அறிவிப்பு வெளியிடவில்;லை.
 
ஆர்ப்பாட்டங்களும் நடைபெறவுள்ளதால் அதனைத் தடுக்கப் பெருமளவு பொலிஸார் வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக இலங்கை மருத்துவர் சங்கமும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதேவேளை, மின்கட்டண உயர்வுக்கு எதிராகக் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு தீப்பந்தங்களை ஏந்தியவாறு மக்கள் போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

கொழும்பு மாளிகாவத்தையில் இப் போராட்டம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஐநூறு வீதம்வரை மின் கட்டணம் உயர்வடைந்துள்ளதாகவும் அமைச்சர்கள் மற்றும் அரசியல் செல்வாக்குள்ளவர்களின் மின் கட்டண நிலுவை சுமார் ஐநூற்று ஐம்பது மில்லியன் என்றும் ஆனால் அவற்றை அரசாங்கத்தினால் மீளப் பெறமுடியவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ள ஊழியர் சம்மேளனம் சாதாரண மக்களிடம் கட்டணங்களை அதிகரித்து நஷ்டத்தை ஈடு செய்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.