இலங்கைத்தீவில்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

தேர்தல்கள் ஆணைக்குழு வெள்ளியன்று கூடுகின்றது
பதிப்பு: 2023 மார்ச் 02 21:23
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 05 09:16
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் முந்நூற்று நாற்பது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி தொடர்பாக நாளை வெள்ளிக்கிழமை இறுதி முடிவு அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி இறுதி முடிவு எடுக்கும் என்றும், அதன் பின்னர் அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் எனவும் ஆணைக்குழு வட்டாரங்கள் கூறுகின்றன. உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் ஒன்பதாம் திகதி நடைபெறுமென தேர்தல் ஆணைக்குழு முன்னதாக கூறியிருந்தது. ஆனாலும் நிதி இல்லையென நிதியமைச்சின் செயலாளர் அறிவித்ததனால் தேர்தலை நடத்த முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவிவித்திருந்து.
 
இதன் காரணமாகத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்திருந்தன. இதனால் தேர்தல் பற்றிய இறுதி அறிவிப்பு மார்ச் மாதம் மூன்றாம் திகதி வெளியிடுவதென அரசாங்கம் கூறியிருந்தது.

இந்த நிலையில் நாளை கூடவுள்ள ஆணைக்குழு தேர்தல் நடத்துவது பற்றிய திகதியை அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அநேகமாகத் தேர்தல் ஒத்திவைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றே அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.