ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டம்

பொலிஸாருடன் வாய்த்தர்க்கம்
பதிப்பு: 2023 மார்ச் 08 22:53
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 09 23:59
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராகப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதும் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கமும் மோதலும் ஏற்பட்டது. களனி பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் இன்று இரவு வரை தொடர்ந்ததால் பொலிஸார் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் பல மாணவர்கள் பலர் சிதறி ஓடினர். வேறு பல மாணவர்கள் பொலிஸாருடன் நேருக்கு நேராக நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் செய்தனர்.
 
அதேநேரம் கொழும்புப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பேரணி மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட போதும் ஆர்ப்பாட்டத்திலிருந்து மாணவர்கள் பின்வாங்கவில்லை. பொலிஸாரின் தாக்குதல்களை எதிர்த்துத் தொடர்ந்து போராடினர்.

இதனால் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி செல்லும் வீதியை மறித்து பெருமளவு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் பொலிஸாருடன் தர்க்கப்பட்டனர். கொழும்பு பல்கலைக்கழகப் பிரதேசத்தில் பதற்றம் நிலவியது. போக்குவரத்தும் தடைப்பட்டன.

கொழும்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் செவ்வாய்க்கிழமை கண்ணீர்ப்புகைத் தாக்குதல் வீசப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்றைய பேரணி நடத்தப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த இரண்டு போராட்டங்களினாலும் கொழும்பு நகரில் புதன்கிழமை முற்பகல் முதல் இரவு பத்து மணிவரையும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் செயலிழக்கும் நிலையும் ஏற்பட்டது.