இலங்கை மீதான சீன அரசின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த

இரு அதிவேக ரோந்துப் படகுகளை ஜப்பான் இலங்கைக்கு வழங்கியது- வெளிவிவகார அமைச்சர் நாளை கொழும்பில்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் சந்திப்பார்?
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 27 16:36
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 29 23:25
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) இலங்கைக்கு வருகை தந்து இரண்டு வாரங்களில் ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) மூன்று நாட்கள் பயணமாக நாளை செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வரவுள்ளார். ஜப்பான் அரசு நன்கொடையாக வழங்கிய இரண்டு அதிவேக ரோந்துப் படகுகளையும் இலங்கைக் கடற்படையிடம் கையளிப்பதற்காகவே அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பில் ஜப்பான் துாதரகம் தெரிவித்துள்ளது. கையளிக்கும் நிகழ்வு கொழும்புத் துறைமுகத்தில் நாளை மறுநாள் புதன்கிழமை நடைபெறவுள்ளது. மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு வரவுள்ள ஜப்பான் வெளிவிகார அமைச்சர், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் சந்திக்கவுள்ளார். ஆனால், சந்திக்கவுள்ளமை குறித்து கூட்டமைப்பு அமைப்பு எதுவுமே கூறவில்லை.
 
அமெரிக்கக் கடற்படையின் விசேட படைப்பிரிவு அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக் கடற்படைக்கு கடந்த மாதம் திருகோணமலைத் துறைகத்தில் உள்ள இலங்கைக் கடற்படையின் பிரதான முகாமில் பயிற்சியளித்திருந்தது.

அதன் பின்னர் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா இலங்கைக்கு வந்து திருணோமலைத் துறைமுகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளைப் பார்வையிட்டிருந்தார்.

அதன் பின்னர் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான USS Anchorage என்ற கப்பல் சென்ற வெள்ளிக்கிழமை காலை வருகை தந்திருந்தது.

இந்த நிலையில் ஜப்பான் அரசு, இலங்கை அரசாங்கத்துக்கு நன்கொடையாக இரண்டு அதிவேக ரோந்துப் படகுகளை வழங்கியுள்ளது. அத்துடன் இலங்கை அரசுடன் கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தங்களையும் ஜப்பான் செய்யவுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஐந்தாம் திகதியும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆலோசனைப்படி ஜப்பான், இலங்கை மீது கவனம் செலுத்தியுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.

போருக்கு உதவியளித்திருந்த ஜப்பான் இந்தியா, மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துக்கு இராணுவ ஒத்துழைப்புக்களை வழங்கி. தமது அரசியல். பொருளாதார நலன்களுக்கு மேலும் வலுா்ச்சேர்ப்பதாக அவதானிகள் கூநுகின்றனர்.