இலங்கையில் சீரற்ற காலநிலை

கடும் மழையினால் நான்கு பேர் பலி மேலும் 4 பேர் காயம் - எட்டு இலட்சத்து மூவாயிரத்தி 496 மக்கள் பாதிப்பு

வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கை மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
பதிப்பு: 2018 ஒக். 06 19:47
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 06 21:07
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கை நேரப்படி இன்று இதிகாலை முதல் பெய்துவரும் கடும்மழையினால் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 936 குடும்பங்களைச் சேர்ந்த 8 இலட்சத்து 3 ஆயிரத்து 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 6 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 1042 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
 
மன்னார், புத்தளம், கொழும்பு ஊடாக பொத்துவில் வரையிலும் மற்றும் அம்பாந்தோட்டை முதல் நீர்கொழும்பு வரையுள்ள கடல் பகுதியில் தொழிலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடமேல், மத்திய, வடமத்திய ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வடக்கு- கிழக்கு பகுதிகள் உள்ளிட்ட இலங்கையின் கரையோர பகுதிகளில் உள்ள மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென இலங்கை மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று இரவு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலையகத்தின் பதுளை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.