இலங்கை அரசியல் நெருக்கடியில் மேலும் குழப்பங்கள்

பிரதமரின் செயலாளர் அரச நிதியைப் பயன்படுத்த முடியாது- பிரேரணை நிறைவேறியது- மகிந்த தரப்பு புறக்கணிப்பு

விஜேதாச ராஜபக்ச, அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோர் மகிந்த தரப்பில் இருந்து விலகினர். நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
பதிப்பு: 2018 நவ. 29 14:50
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 29 15:10
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் செயலாளருக்கு இலங்கை அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை நிறுத்துவதற்கான பிரேரணை 123 வாக்குகளினால் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று நண்பகல் கூடியதும் ஐக்கியதேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட மூத்த உறுப்பினர் ரவி கருணாநாயக்க இந்தப் பிரேரணையை சமர்ப்பித்தார். ஆனால் நாடாளுமன்ற அமர்வை மகிந்த ராஜபக்ச தரப்பு புறக்கணித்துள்ளது. சபாநாயகர் நாடாளுமன்றத்தை நிலையியல் கட்டளைச் சட்டங்களுக்கு அமைவாகக் கூட்டும் வரை சபை நடவடிக்கைகளை புறக்கணிக்கவுள்ளதாக மகிந்தரப்பு சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.
 
ஆனால் பெரும்பான்மைப் பலம் இல்லாததால் மகிந்த தரப்பு நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்து கௌரவமாகத் தப்பிக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தப் புறக்கணிப்பு மகிந்த தரப்பக்கு அவமானம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை மகிந்த தரப்பு நாடாளுமன்ற அமர்வை பறக்கணித்தாலும் மகிந்த தரப்பு உறுப்பினர்களான சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச, அத்துரலிய ரத்தின தேரர் ஆகியோர் விசேட உரையாற்றியிருந்தனர்.

குறித்த வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்ட பின்னர் நாடாளுமன்ற அமர்வை நாளை வெள்ளிக்கிழமை காலை 10.30 வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

அதேவேளை, மகிந்த ராஜபக்ச தரப்புக்கு மாறிச் சென்று கல்வி, உயர் கல்வி அமைச்சராகவும் பதவியேற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய உரை ஒன்றை நிகழத்தினார்.

பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்றும் அவ்வாறு பெரும்பான்மை உள்ள கட்சி ஒன்றுதான் அரசாங்கத்தை அமைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் எந்தத் தரப்புக்கும் ஆதரவின்றி சுயமாக இயங்கவுள்ளதாக நாடாளுமன்ற கட்டடத்தில் வைத்து செய்தியாளர்களிடம் விஜேதாச ராஜபக்ச கூறியுள்ளார்.

அத்துரலே ரத்தன தேரரும் நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றிய பின்னர் எதிர்த்தரப்பு ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

இதுவரை நாளும் மகிந்த தரப்புக்கு தேரர் ஆதரவு வழங்கியிருந்த நிலையில் இன்று எதிர்த்தரப்புக்கு மாறிச் சென்றதோடு நாடாளுமன்றத்தில் சுயமாக செயற்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.