வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில்

தொண்டைமானாறு - இடைக்காடு பிரதேசங்களை இணைக்கும் வீதியை உடனடியாக புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

அரசாங்கத்தின் கண்துடைப்பு நாடங்களால் உயிராபத்தை எதிர்நோக்குவதாக மக்கள் விசனம்
பதிப்பு: 2018 டிச. 02 09:51
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 02 09:57
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு பகுதியையும் அச்சுவேலி - இடைக்காடு பிரதேசத்தையும் இணைக்கும் வீதியை மூடி கடல் நீர் தேங்கி நிற்பதனால் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாவதுடன் உயிராபத்தை எதிர்நோக்குவதாக அந்தப் பகுதியால் பயணிப்போர் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர். தற்போது பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில் கடும் மழையை அடுத்து கடல் நீர் பெருக்கெடுத்துள்ளதால் கடந்த சில நாட்களாக இந்த நிலை நீடிப்பதாக மக்கள் விசனம் வெளியிட்டனர்.
 
இனஅழிப்பு போரின் பின்னர் அப்போது ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபச்ச தலைமையிலான அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில் கண்துடைப்புக்காக பிரதான வீதிகளை மாத்திரம் செப்பனிட்டதாகவும் கிராமங்களின் உட்புற வீதிகள் இதுவரை கவனிப்பாரற்ற நிலையிலேயே காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தப் பகுதியில் உள்ள வீதிகளில் வீதி விளக்குகள் பொருத்தப்படாததால் இரவு நேரங்களில் வீதியால் பயணிப்போர் விபத்துக்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதுடன் உயிராபத்தை எதிர்நோக்குவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

உரிய தரப்பினரிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்த போது பிரச்சனைக்கு தீர்வைக் காண்பது குறித்து எவ்வித சாதகமான பதிலையும் அவர்கள் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டியதுடன் எதிர்வரும் காலங்களில் ஏற்படப்போகும் ஆபத்துக்களைத் தடுத்து நிறுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலிந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.