இலங்கையின் தலைநகர்

கொழும்பு - மோதரை பகுதியில் துப்பாக்கிச்சூடு - பெண் உட்பட ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

அரசியல் நெருக்கடியான சூழலில் துப்பாக்கிச்சூடுகள் தொடர்வதாக மக்கள் விசனம்
பதிப்பு: 2018 டிச. 10 16:09
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 10 16:41
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கொழும்பு -மட்டக்குழிய மோதரை பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் உட்பட ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியேட்சகர் ருவான் குணசேகர உறுதிப்படுத்தியுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்தோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சம்பவ இடத்திற்குச் சென்ற மோதர பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்காண காரணங்கள் தெரியவில்லை என்றும் பாதாளஉலக குழுவின் கைவரிசையாக இருக்கலாம் எனவும் மோத பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
 
அதேவேளை, பொதுமக்களின் நடமாட்டங்கள் கூடுதலாக உள்ள இந்தப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதால் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததையடுத்த இலங்கையில் பாரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த அரசியல் நெருக்கடியான காலப்பகுதிகளில் அடையாளந்தெரியாத நபர்களால் பல்வேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.