தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் முழுமையான ஆதரவுடன்

ஐந்தாவது தடவையாக இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க

மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம்
பதிப்பு: 2018 டிச. 16 11:08
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 16 14:53
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.16க்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தனது பதவியைப் ரணில் பொறுப்பேற்றுக்கொண்டதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
 
கடந்த 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் இணைந்து தமிழ் மக்களது பொரும்பான்மைப் பலத்துடன் ஆட்சிக்கு வந்த போது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும் இந்த அரசாங்கம் தனது ஆட்சிக்காலத்தை நிறைவு செய்யாத நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி தன்னிச்சையாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்திருந்தார்.

அத்துடன் நாடாளுமன்றத்தைக் கலைத்து தனது சுயவிருப்பத்திற்கேற்ப இலங்கை அரசியல் யாப்பை மீறி அடாவடியில் ஈடுபட்டார்.

எனினும் மைத்திரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கை சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் 50 நாட்களின் பின்னர் நேற்றுச் சனிக்கிழமை மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.

இதனையடுத்து ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக இன்று பதவியேற்றார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு எவ்வாறு தமிழ் மக்களின் வாக்குப் பலத்தினால் மைத்திரி - ரணில் கூட்டரசாங்கம் உருவாக்கப்பட்டதோ அதேபோன்று தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க தனது பிரதமர் பதவியைப் பெற்றுக்கொண்டுள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.