இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின்

வடமாகாண ஆளுநராக பௌத்த துறவிகள் குறித்த நுாலை எழுதிய சுரேன் ராகவன் மைத்திரிபால சிறிசேனவினால் நியமனம்

இலங்கை முப்படையினர் அங்கம் வகிக்கும் ஜனாதிபதி செயலணியின் ஆலேசகராகவும் பணியாற்றியவர்
பதிப்பு: 2019 ஜன. 07 17:43
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 07 20:57
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#SurenRagavan
#Governer
#NothernProvince
#Srilanka
#Tamil
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேற்பார்வையில் இலங்கை முப்படைத் தளபதிகள், இலங்கை அரச உயர் அதிகாரிகள் அங்கம் வகிக்கும் வடமாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஆலோசகர் சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் அமைச்சுக்களின் செயளலாளர்கள். மாகாண சபைகளின் ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் கிழக்கு உட்பட ஐந்து மாகாணங்களின் ஆளுர்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் வடமாகாணத்திற்கான ஆளுநராக சுரேன் ராகவன் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டு;ள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
 
ஒட்டாவா சென் போல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர்தான் வடமாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஆலோசகாராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டிருந்தார்.

தமிழர் ஒருவர் வடக்கு மாகாணத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதற் தடவையாகும்.

இலங்கை ஓற்றையாட்சி அரசாங்கத்தின் கீழ் செயற்படும் மாகாண சபை முறையில் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றனர். இதனால் மாகாணங்களின் முதலமைச்சர்களை விட ஆளுநர்களுக்கே கூடுதல் அதிகாரங்கள் உண்டு.

அத்துடன் ஆளுநர்கள் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரியவராகவும் செயற்படுவார்கள். இந்த நிலையில் தமிழரான சுரேன் ராகவன் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2005ம் ஆண்டு கென்ட் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் முதுமானிப் பட்டம் பெற்ற சுரேன் ராகவன், ஆசியாவில் முதன்முறையாக ஜேம்ஸ் மெடிசன் நம்பிக்கை புலமைப் பரிசிலை இரு தடவைகள் பெற்றிருந்தார். அத்துடன் கனடா - ஒன்டோரியோ பல்கலைக்கழகத்தின் OSAP விருதினையும் பெற்றிருந்தார்.

2008-2011 ஆம் ஆண்டுகளில்; அவருக்கு பிரித்தானிய அரசாங்கத்தின் புலமைப்பரிசிலும் பெற்றிருந்தார். 2008 ஆம் ஆண்டு கலாநிதி (PHD) பட்ட்ப்படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார்.

பௌத்த துறவிகளுக்கும், யுத்தத்துக்குமான இடைத்தொடர்புகள் குறித்த இரண்டு நூல்களை சமீபத்தில் எழுதி வெளியிட்டிருந்தார்.

(The Buddhist Monks and the Politics of Lanka’s Civil War (Equinox – UK)> and Post -War Militancy of Sinhala Saṅgha: Reasons and Reactions (Oxford University Press (North America) [co-edited].)