வடமாகாணத்தில்

பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் வீதியில் அதி வேகத்துடன் பயணிக்கும் இலங்கை இராணுவ வாகனங்கள் - அச்சத்தில் மக்கள்

வீதி விபத்துக்களும் அதிகரித்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
பதிப்பு: 2019 ஜன. 18 11:20
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 19 16:12
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Jaffna
#Kilinochchi
#Poonakary
#Srilanka
#Military
#Accident
தமிழர் தாயகப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினரின் போக்குவரத்து நடவடிக்கையால் வீதியில் நடமாடுவதற்கு அச்சமாக உள்ளதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இறுதிக்கட்ட இன அழிப்பு போர் நடைபெற்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள இராணுவத்தினர் தமது கனரக வாகனங்களில் வீதிகளில் வேகமாக பயணிப்பதாகவும் வேகக் கட்டுப்பாட்டை அவர்கள் பின்பற்றுவதில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தாயகப் பகுதிகளில் இல்ங்கை இராணுவத்தினரின் வானங்களால் விபத்துக்கள் ஏற்படுத்தப்பட்டு உயிரிழப்புக்கள் இடம்பெற்றுவரும் நிலையில், இராணுவத்தினரின் இந்த நடவடிக்கை குறித்து மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.
 
குறிப்பாக, கிளிநொச்சியிலிருந்து பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் வீதியை இராணுவத்தினர் தமது தேவைக்காக அதிகம் பயன்படுத்துவதாக மக்கள் குறிப்பிட்டனர்.

புனரமைக்கப்பட்டுள்ள இந்த வீதியினால் அதிகளவான மக்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்று வருவதுடன், வாகன சாரதிகளும் இலகுவான போக்குவரத்து நடவடிக்கைக்காக இந்த வீதியைப் பயன்படுத்துகின்றனர்.

இதனால், இந்த வீதி தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருக்கின்ற நிலையில், இதே வீதியால் இல்ங்கை இராணுவத்தின் கனரக வாகனங்கள் அதி வேகத்துடன் பயணிக்கின்றமை அச்சத்தை ஏற்படுத்துவதாக பூநகரி மக்கள் சுட்டிக்காட்டினர்.

பிள்ளைகளைத் தனியாக பாடசாலைக்கு அனுப்புவதற்கு அச்சமாக உள்ளதாகவும், முதியவர்கள் உட்பட பலரும் நடந்து செல்வதற்கு கூட அச்சமடைவதாகவும் பிரதேசவாசியொருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த வீதியில் அண்மைக் காலங்களில் விபத்துக்கள் அதிகரித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.