இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புடன் கூடிய கண்டனப் போராட்டம்

சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் பொறியே பயங்கரவாத தடைச் சட்டம்
பதிப்பு: 2019 ஜன. 21 10:56
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 21 11:02
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PTA
#Srilanka
#Jaffna
#Protest
இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புடன் கூடிய கண்டனப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது அமைப்புக்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ்ப்பாணம் வேம்படி சந்திக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 அளவில் ஒன்று கூடிய போராட்டக்காரர்கள், பேரணியாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் வரை சென்று அங்கு கண்டனப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
 
இதன்போது பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக பல சுலோகங்கள் எழுதப்பட்ட வாசகங்களைத் தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.

மக்கள் பிரதிநிதிகளே, பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (CTA) ஆகியவற்றை மக்களிடம் கேளுங்கள், சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் பொறியே பயங்கரவாத தடைச் சட்டம், ஊடகங்களே PTA, CTA பற்றிய தங்களின் பார்வை எங்கே என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை மக்கள் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதாக யாழ்ப்பாணத்தில் உள்ள கூர்மை செய்தியாளர் சுட்டிக்காட்டினார்.