வடமாகாணத்தின்

கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு மதுபானசாலைகள் மாத்திரமே உள்ளன - மாவட்ட செயலகம் தகவல்

தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு மாவட்ட செயலகம் பதில்
பதிப்பு: 2019 பெப். 14 12:23
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 14 12:54
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Kilinochchi
#Wineshop
#RTI
கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு மதுபானசாலைகள் மாத்திரமே உள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி கூர்மையின் கிளிநொச்சி செய்தியாளர் முன்வைத்த விண்ணப்பத்துக்கு வழங்கிய பதிலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கிளிநொச்சியில் உள்ள மதுபானசாலைகளின் எண்ணிக்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள மாவட்ட செயலகம்,

விடுதியுடன் கூடியதாக 03 மதுபானசாலைகள் காணப்படுவதாகவும், தற்போது அவற்றில் 02 மாத்திரமே இயங்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் விடுதியுடன் கூடியதாக 03 மதுபானசாலைகள் அமைப்பதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் வழங்கியுள்ள பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கண்டாவளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு மதுபானசாலையும், கரைச்சி பிரதேச செயலயகத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு மதுபானசாலையும் காணப்படுவதுடன், அதே பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் மதுபானசாலைக்காக வழங்கப்பட்ட அனுமதி கடந்த 2012 ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.