விவசாய நிலமான

வயலிலிருந்து மண் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை - கிளிநொச்சி கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தகவல்

கமக்கார அமைப்பின் தலைவரால் மண் அகழப்பட்டதாக கமக்கார அமைப்பில் முறைப்பாடு
பதிப்பு: 2019 பெப். 16 22:15
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 16 22:21
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Kilinochchi
#PaddyField
#AgricultureDepartment
விவசாய நிலமான கிளிநொச்சி ஊரியான் பகுதியில் வயல் நிலத்திலிருந்து மண் அகழ்வதற்கான எந்த அனுமதிகளும் வழங்கப்படவில்லை என்று கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கோரக்கன்கட்டு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட ஊரியான் கமக்கார அமைப்பின் கீழுள்ள வயல் காணி ஒன்றிலிருந்து நேற்று முன்தினம் நீண்ட காலம் பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் பனை மரங்கள் என்பன அழிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த காணியில் இருந்து முரசுமோட்டை கமக்கார அமைப்பின் தலைவரால் மண் அகழ்ந்தெடுக்கப்பட்டு தனது காணிக்குள் நிரப்பப்பட்டுள்ளதாக கமக்கார அமைப்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
அத்துடன் இந்த விடயம் குறித்து கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர், கதிர்காமநாதனிடம் கூர்மையின் கிளிநொச்சி செய்தியாளர் தொடர்பு கொண்டு வினவினார்.

இதற்குப் பதிலளித்த பெரும்பாக உத்தியோகத்தர், ஊரியான் கமக்கார அமைப்பிற்கு உட்பட்ட காணியிலோ அல்லது கழிவு காணிகளிலோ மரங்களை அழித்து மண் அகழ்வு மேற்கொள்வதற்கோ வயல்நிலங்களை மண்ணிட்டு நிரப்புவதற்கோ அனுமதிக்கப்படவில்லை.

மேற்குறித்த வேலையை ஒரு அமைப்பினுடைய தலைவரும் சம்மேளனத்தின் பொருளாளரும் இணைந்து எந்தவித அனுமிகளுமின்றி செய்திருப்பது சட்டதிட்டங்களை அவமதிக்கும் செயலாகும். இது தொடர்பில் உரிய கமக்கார அமைப்பிடம் இருந்து குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இது குறித்து கருத்து வெளியிட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயகுலன் ஊரியான் பகுதியில் மண் அகழ்வதற்கான எந்த அனுமதிகளும் வழங்கப்படவில்லை என்றும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.