வடமாகாணத்தின்

கிளிநொச்சி மாவட்டத்தில் மீன்பிடி உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது - நீரியல்வளத் திணைக்களம் தகவல்

தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை தொடர்பில் தமிழ் மீனவர்கள் விசனம்
பதிப்பு: 2019 பெப். 17 09:59
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 17 10:11
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Fisheries
#Srilanka
#Kilinochchi
#NothernProvince
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை காரணமாக தமது வாழ்வாதாரத் தொழிலான மீன்பிடி பாதிக்கப்படுவதாகவும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை காரணமாக கடல்வளம் அழியும் அபாயம் காணப்படுவதாகவும் தமிழ் மீனவர்கள் அச்சத்துடன் கவலை வெளியிட்டுவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடி உற்பத்தி கடந்த 2017 ஆம் ஆண்டைவிட 2018 ஆம் ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளதாக நீரியல்வளத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
இன அழிப்புப் போரின் போது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து பின்னர் மீண்டும் குடியேறியுள்ளோரில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் நான்காயிரத்து 113 குடும்பங்களைச் சேர்ந்த பதினாறாயிரத்து 801 பேர் மீன்பிடியைத் தமது வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018 ஆம் ஆண்டில் மீன்பிடியில் வீழச்சிநிலை ஏற்பட்டுள்ளதாக, நீரியல்வளத் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு வாழ்வாதார நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மீனவர்களின் முதலீடுகளுக்காக கிடைத்த மொத்த உற்பத்தி பத்தாயிரத்து 471 மெற்றிக்தொன் கடலுணவுகளாகும்.

ஆனால், 2017 ஆம் ஆண்டில் பதினாறாயிரத்து 664 மெற்றிக்தொன் கடலுணவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

2017 ஆம் ஆண்டுக்கும் 2018 ஆம் ஆண்டுக்கும் இடையே ஆயிரத்து 200 மெற்றிக்தொன் உற்பத்தி குறைவாக கிடைத்துள்ளது.

குறிப்பாக, 2018 ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைதீவு கடற்பகுதியில் கடற்தொழில் செய்வதற்காகவும் அங்கு மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொழில் பரப்பை விட, 2018 ஆம் ஆண்டில் கூடுதலான பகுதியில் கடற்தொழில் மேற்கொள்ளப்பட்டதாக குறித்த புள்ளிவிபர தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.