இலங்கையில்

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் 4 ஆயிரம் பேர் கொழும்பில் பேரணி

நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஒன்று கூடிய மாணவர்கள்
பதிப்பு: 2019 மார்ச் 13 22:58
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 13 23:36
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த சுமார் நான்காயிரம் மாணவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக இன்று புதன்கிழமை பேரணி ஒன்றில் ஈடுபட்டனர். கொழும்புப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்திற்கு அருகில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் அங்கிருந்து பேரணியாக நாடாளுமன்ற வளாகம் வரை சென்றது. அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இலஙகைப் பொலிஸார் மாணவர்களின் பேரணி மீது கண்ணீர்ப்புகை, மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டனர். இதனால் மாணவர்கள் பலருக்குக் காயங்கள் ஏற்பட்டன. பல்கலை மாணவர்கள் ஒருங்கிணைப்பாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாக வேறொரு சட்டமூலத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
ஆனால் ஆனால் புதிய சட்டமூலம் தேவையில்லை என்றும் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

மைத்திரி, ரணில் ஆகியோரை விமர்சிக்கும் சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறும் மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றத்திற்குச் செல்லும் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் மேலதிக பொலிஸரும் விசேட அதிரடிப்படையினரும் கூடுதல் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இலங்கையின் அரசியல் யாப்பில் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமூலில் உள்ளது. போருக்குப முன்னரும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர், யுவதிகள் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் ஆர்ப்பாட்டங்களின்போது இந்தச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதேவேளை, ஜெனீவா மனித உரிமைச் சபையும் இந்தச் சட்டமூலத்தை நீக்குமாறு வலியுறுத்தி வருகின்றது.