2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரன சூழலில்

அவுஸ்திரேலிய, இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் - கொழும்பில் தூதுவர் அறிவிப்பு, நான்கு கப்பல்கள் வருகை

ஆனால் இலங்கை அரசாங்கம் மௌனம்
பதிப்பு: 2019 மார்ச் 15 18:57
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 17 11:55
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Australia
#SecurityAgreement
#AustralianNavy
அவுஸ்திரேலியாவும் இலங்கையும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையேயான பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் அவுஸ்திரேலிய அரசாங்கம் நீண்டகாலமாக பேச்சு நடத்தியது என்றும் அதனடிப்படையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் எனவும் கொழும்பில் உள்ள அவுஸ்திரேலியப் பிரதித் தூதுவர் ஜோன் பிலிப் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்றமை தொடர்பாக கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவுஸ்திரேலியப் பிரதி தூதுவர் ஜோன் பிலிப் விளக்கமளித்தார். ஆனால் இதுவரையும் இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக எதுவும் கூறவில்லை.
 
ஆனால் அவுஸ்திரேலியாவுடன் செய்யப்படவுள்ள ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ருவான் செனவிரட்ன இலங்கை நாடாளுமன்றத்தில் விளக்கமளிப்பார் என இலங்கையின் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இலங்கைக் கடற்பரப்பில் அவுஸ்திரேலியக் கப்பல்கள் வந்து செல்வது, கூட்டுப் பயிற்சி பற்றிய விடங்கள் உள்ளடங்கியுள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலியப் பிரதித் தூதுவர் ஜோன் பிலிப் தெரிவித்தார்.

ஆனால் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உள்ள முழுமையான விடயங்கள் எதனையும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கவில்லை. எனினும் இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, அவுஸ்ரேலியக் கடற்படையின் ஈரூடக உலங்குவானூர்தி தாங்கி கப்பலும் கட்டளைக் கப்பலுமான HMAS Canberra, மற்றும் HMAS Newcastle என்ற அவுஸ்ரேலிய கடற்படையின் ஏவுகணைப் போர்க்கப்பலும் எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ளது.

நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான, HMAS Parramatta மற்றும் விநியோக கப்பலான HMAS Success ஆகியவை 23ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ளதாக அவுஸ்ரேலியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் குறூப் கப்டன் சீன் உன்வின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

HMAS Canberra என்ற உலங்குவானூர்தி தாங்கி கப்பலில் இலங்கை இராணுவத்திற்கு விமான மூலம் தரையிறக்கப்படும் பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலியக் கடற்படை, விமானப்படை, இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் அவுஸ்திரேலியக் கப்பலில் வருகை தரவுள்ளனர். இலங்கைப் பயணத்தைத் தொடர்ந்து இந்திய பசுபிக் பிராந்தியத்திலுள்ள வேறுபல நாடுகளின் துறைமுகங்களுக்கும் இக் கப்பல்கள் பயணிக்கவுள்ளன.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் இந்தியா மற்றும் அமெரிக்க போன்ற மேற்குலக நாடுகளின் செயற்பாடுகள் இலங்கையில் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாகத் திருகோணமலைத் துறைமுகத்தை மையப்படுத்திய செயற்பாடுகள் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் அதிகரித்துள்ளன.

முல்லைத்தீவு கடற்பகுதியில் இருந்து திருகோணமலை கிழக்கு கடற்பகுதி வரை எண்ணெய்வள ஆய்வு ஒன்றில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.