2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில்

தமிழ் இனப்படுகொலை தொடர்பான விசாரணைக்கு சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் - பேரணியில் கோஷம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பல்லாயிரம் மக்கள் பங்கேற்பு
பதிப்பு: 2019 மார்ச் 16 15:33
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 17 11:50
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Tamilgenocide
#Rally
#UOJ
#UniversityofJaffna
#Students
#TNPF
#Jaffna
#TNA
#Mavaisenathirajah
இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இனஅழிப்பை வெளிப்படுத்தியும் போர்க்குற்றம் மற்றும் இன அழிப்பு விசாரணைக்கு சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் அவசியம் என்பதை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்றது. 'நீதிக்காய் எழுவோம்' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாணம் முற்றவெளி வரை சென்றது. அங்கு ஒன்றுகூடிய மக்கள் இலங்கை அரசாங்கம், இலங்கை இராணுவம் ஆகியவற்றுக்கு எதிரான கோசங்களை எழுப்பினர். சுலோக அட்டைகளையும் பதாதைகளையும் கைகளில் எந்தியிருந்தனர்.
 
பேரணியில் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, தமிழர் விடுதலைக் கூட்டணி, இலங்கைத் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் உள்ளிட்ட பல பொது அமைப்புக்கள் ஆதரவு வழங்கியிருந்தன.

ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதே பேரணியில் கலந்து கொண்ட மக்களின் கோரிக்கையாக இருந்தது.

ஆனால் கால அவகாசம் வழங்குவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் வரவேற்றிருந்தார். எனினும் இன்று இடம்பெற்ற பேரணியில் கூட்டமைப்பின் பிரதித் தலைவரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவும் பங்குபற்றியிருந்தார்.

ஆனால் பேரணியில் கலந்துகொண்ட மக்கள், மாவை சேனாதிராஜா கலந்துகொண்டதையிட்டு விசனமடைந்தாக மாணவர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

அதேவேளை, இந்தப் பேரணியால் யாழ்ப்பாணம் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருந்தது.