2009 ஆம் ஆண்டு

இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரி கிழக்கு மாகாணத்தில் பேரணி - ஹர்த்தால்

யாழ் பல்கலைக்கழக மாணவா்கள், கல்விச் சமூகம் ஆதரவு
பதிப்பு: 2019 மார்ச் 19 10:11
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 20 09:32
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Tamilgenocide
#War
#Srilanka
#Missingpersons
#OMP
#Batticaloa
#Easternprovince
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் எழுச்சிப் பேரணி ஒன்று நடைபெற்றது. தமிழ் இன அழிப்புத் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இடம்பெற்ற பேரணியில் பல்லாயிரம் மக்கள் கலந்துகொண்டனர். வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது. போராட்டத்தினால் கிழக்கு மாகாணம் ஸ்தம்பிதமடைந்தது. அரசியல் கட்சிகள், வடக்கு – கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள், கிழக்குப் பல்கலைக்கழகச் சமூகம், கல்விச் சமூகம் ஆதரவை வழங்கியுள்ளது. போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் கல்வியாளர்களும் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
 
இந்தப் போராட்டம் குறித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலும் தமிழ் மக்களின் பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கைப் பொலிஸாரும் இலங்கை விசேட அதிடிப்படையினரும் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.

அதேவேளை, தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இலங்கையில் நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அத்தகைய அடக்குமுறைகள் இலங்கைத்தீவில் திட்டமிடப்பட்ட ரீதியிலான தமிழ் மக்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பாகவே உள்ளதாகவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.