இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

ஜனாதிபதி வேட்பாளரே என்று கோட்டாபய ராஜபக்சவைப் பார்த்துக் கூறினார் அமைச்சர் நவின் திஸாநாயக்கா

கரு ஜயசூரியவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர என்றார் கோட்டா
பதிப்பு: 2019 மார்ச் 20 23:24
புதுப்பிப்பு: மார்ச் 20 23:37
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரென செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் பாராட்டுக்கள் அதிகரித்துள்ளன. எதிர்க்கட்சியிலும் ஆளும் கட்சியிலும் உள்ள பலர் கோட்டாபய ராஜபக்சவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்கால ஜனாதிபதி வேட்பாளரே என்று கோட்டாபய ராஜபக்சவைப் பார்த்து ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் நவீன் திஸாநாயக்க கூறியுள்ளார். இன்று புதன்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு கொழும்பு நாராஹேன்பிட்டிய விகாரையில் நடைபெற்ற நிகழ்வில், கோட்டாபய ராஜபக்ச, அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகிய இருவரும் கலந்துகொண்டனர்.
 
அங்கு உரையாற்றிய அமைச்சர் நவின் திஸாநாயக்கா, தனது உரையின் போது கோட்டாபய ராஜபக்சவைப் பார்த்து ஜனாதிபதி வேட்பாளரே எனக் கூறி வாழ்த்துத் தெரிவித்தார்.

சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளினால் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகின்றது எனவும் அமைச்சர் நவின் திஸாநாயக்கா கூறினார். இனிவரும் நாட்களில் நடைபெறவுள்ள பல நிகழ்வுகளில் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ச கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அமைச்சர் நவின் திஸாநாயக்கா தெரிவித்தார்.

அதனையடுத்து உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ச, அமைச்சர் நவின் திஸாநாயக்காவுக்கு நன்றி தெரிவித்தார்.

அத்துடன் நவின் திஸாநாயக்காவின் மாமனாரான சபாநாயகர் கரு ஜயசூரியவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்ப்பார்ப்பதாகவும் கோட்;டாபய ராஜபக்ச கூறினார்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்கவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரென கட்சித் தகவல்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.