பூகோள அரசியலின் சூட்சுமங்களை உலகுக்கு வெளிக்கொணர்ந்த

யூலியான் அஸாஞ் பிரித்தானியாவால் கைது- அமெரிக்காவின் அழுத்தமெனக் குற்றச்சாட்டு

பிரித்தானியா வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர் களமிறங்கவேண்டிய தருணம் இது
பதிப்பு: 2019 ஏப். 11 15:58
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 02 21:44
Julian Assange
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஈழத்தமிழர் மீதான இன அழிப்புப் போரில் சர்வதேச சக்திகளின் பங்கு பற்றிய பல இரகசியங்களை வெளிக்கொணர்ந்த விக்கிலீக்ஸ் செய்தி இணையத்தளத்தின் நிறுவனர் யூலீயான் அஸாஞ் பிரித்தானியாவில் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா வழங்கிய அழுத்தங்களினாலேயே அவர் பிரித்தானியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பூகோள அரசியல் நகர்வுகள், உள்நாட்டுப்போர்கள், நாடுகளிடையேயான மோதல்கள். உலக அளவில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தீவிரவாதத் தாக்குதல்கள் பற்றிய விடயங்களில் அமெரிக்கத் தலையீடுகள், அமெரிக்க நிலைப்பாடுகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்படும் பல இரகசியத் தகவல்களை விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தியிருந்தது.
 
அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்படும் பல இரகசியத் தகவல்களையே விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தியிருந்தது.

அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரத்திற்காகச் செயற்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் கடும் அழுத்தம் செலுத்தப்பட்டபோதும், அதை எதிர்த்துச் செயலாற்றி வந்துள்ள யூலியான் அஸாஞ் போன்றவர்களே தற்காலத்தின் கருத்துச் சுதந்திரத்திற்கான சர்வதேசப் போராளிகளாகியுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனால் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி யூலீயான் அஸாஞ், கைது செய்யப்பட வேண்டுமென அமெரிக்கா பிடியானை பிறப்பித்திருந்தது. அதனால் யூலீயான் அஸாஞ் சுவீடன் நாட்டுக்குத் தப்பிச் சென்றார்.

ஆனாலும் அங்கு பாதுகாப்பில்லை என்பதை அறிந்துகொண்ட யூலீயான் அஸாஞ் பிரித்தானியாவுக்குச் சென்று அங்கு எக்குவடோர் நாட்டின் தூதரகத்தில் மறைந்திருந்தார்.

யூலீயான் அஸாஞ் லத்தீன் அமெரிக்க நாடான எக்குவடோரின் பிரித்தானியாவில் உள்ள தூதராலயத்தில் அரசியற் தஞ்சத்தில் இருந்தவாறே தனது கருத்துச்சுதந்திரப் போரை நடாத்திவந்தார்.

ஆனால் அவரைக் கைது செய்யுமாறு அமெரிக்கா பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இதனால், இன்று பிரித்தானிய அரசு அந்த எக்குவடோர் தூதராலயத்தின் திடீர் அனுமதியுடன் அவரைக் கைதுசெய்திருப்பதாக இறுதியாகக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே விக்கிலீக்ஸ் நிறுவுனரின் விடுதலைக்காகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்கள் நன்றியுணர்வுடன் களமிறங்கவேண்டும் என்பதைக் கூர்மை இணையத்தள ஆசிரியபீடம் இத்தருணத்தில் தமிழர் தாயகத்தில் இருந்து நினைவுபடுத்துகிறது.

மேற்குலக வல்லாதிக்க நாடுகளில் ஜனநாயக உரிமைகளுக்கும் குடியியல் சுதந்திரங்களுக்கும் இருக்கும் எல்லையை ஜீலியன் அசாஞ்சின் கைது வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக, முகநுால் பதிவு ஒன்றில் கொழும்பில் உள்ள மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கம் கூறியுள்ளார்.

அமெரிக்கா வியட்நாம் மீது போர் நடாத்திக்கொண்டிருந்தபோது அதன் கொடுமைகளை உலகுக்கு, குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு தொலைக்காட்சி ஊடகம் வெளிக்கொணர்ந்து அந்தப்போரில் இருந்து அமெரிக்காவைப் பின்வாங்கவைக்கும் சாதனையை ஊடக சுதந்திரம் நிலைநாட்டிய காலம் ஒன்றிருந்தது.

தற்காலத்தில் அதே அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரத்திற்காகச் செயற்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் கடும் அழுத்தம் செலுத்தப்பட்டபோதும் அதை எதிர்த்துச் செயலாற்றி வந்துள்ள யூலியான் அஸாஞ் போன்றவர்களே தற்காலத்தின் கருத்துச் சுதந்திரத்திற்கான சர்வதேசப் போராளிகளாகியுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, 2012 ஆம் ஆண்டு முதல் பிாித்தானியாவில் உள்ள எக்குவடோர் நாட்டின் தூதரகத்தில் யூலியான் அஸாஞ் மறைந்து வாழ்ந்தார். எக்குவடோர் நாட்டின் அரச நிர்வாகத்துடன் கூட முரண்பட்ட நிலையில் விக்கி லீக்ஸ் செய்தி இணையத்தளத்திற்கான பணியைச் செய்வதிலும் பல இடர்களை யூலீயான் அஸாஞ் எதிர்நோக்கியிருந்தார்.

எனினும் எக்குவடோர் அவருக்கு குடியுரிமையை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கியிருந்தது. எக்குவடோர் வெளியுறவு அமைச்சர் மரியா கூறும் போது, யூலீயான் அஸாஞின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. இது அவருக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் என்றும் கூறியிருந்தார்.

யூலியான் அஸாஞ் அவுஸ்திரேலியாவை பிறப்பிடமாக்க் கொண்டவர். கணணி நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை, யூலியான் அஸாஞ் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரிப் பதிரிகையின் செய்தி முகாமையாளரும் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசேிரியருமான வீரகத்தி தனபாலசிங்கம் முகநுால் பதிவு ஒன்றில் இவ்வாறு கூறுகின்றார்.

மேற்குலக வல்லாதிக்க நாடுகளில் ஜனநாயக உரிமைகளுக்கும் குடியியல் சுதந்திரங்களுக்கும் இருக்கும் எல்லையை ஜீலியன் அசாஞ்சின் கைது வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. எனப் பதிவிட்டுள்ளார்.